புதுடெல்லி: நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் அளவு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு தொற்று புதிதாக பதிவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,44,776 பேர் குணமான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000 பேர் இறந்தனர். 


வியாழக்கிழமை காலை புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,62,727 ஆக இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்றின் எண்ணிக்கை 2,40,46,809 ஐ எட்டியுள்ளது.



இந்தியாவின் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்திற்கு மேல் உள்ளன. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து இதுவரை நாட்டில் 2.40 கோடிக்கும் அதிகமானோர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.


ALSO READ: கொரோனா எண்ணிக்கையில் புதிய உச்சம்: தமிழகத்தில் இன்று 30,621 பேர் பாதிப்பு, 297 பேர் பலி


கேரளா, ஒடிசா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு (Tamil Nadu), புதுச்சேரி, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையின் போக்கில் உயர்வைக் காண முடிகிறது என்று அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


மறுபுறம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா, சண்டிகர், உத்தராகண்ட், ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய ஒன்பது மாநிலங்கள் கடந்த ஒரு வாரத்தில் தினசரி புதிய எண்ணிக்கையில் சரிவைக் காட்டியுள்ளன.


இந்தியாவில் இதுவரை 31,13,24,100 மாதிரிகள் சொதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இவற்றில் 18,75,515 மாதிரிகள் வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டன. நாட்டில் இதுவரை 17,92,98,584 பேருக்கு கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 


தடுப்பூசி (Vaccine) பற்றாக்குறை உள்ளதால், அவற்றை வாங்க உலகளாவிய டெண்டர்களை கோர பல மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. தடுப்பூசி உற்பத்திக்கான பரந்த ஒப்புதலை கோரி பல மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


ALSO READ: Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR