இந்தியாவின் முதல் புல்லட் ரயில் டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த காலக்கெடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. $17 பில்லியல் டாலர் மதிப்பீட்டில் உருவாகிவரும் இந்த திட்டம் தற்போது உள்ளூர் வாசிகளின் போராட்டத்தால் தடைபட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தினை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


திட்டமிட்டப்பட்ட பாதையின் ஐந்தில் ஒரு பகுதி அளவான 108km தொலைவில் பாதை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்திற்கு அப்பகுதி உள்ளூர் அரசியல்வாதிகளும் உறுதுணையாக நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் இந்த விஷயத்தில் விரைவில் தீர்வு கண்டு, திட்டத்தினை செயல்படுத்துவொம் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவர்களது விலைநிலங்களுக்கும் எவ்விர சேதமும் இல்லாமல் இத்திட்டத்தினை செயல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பொதுமக்கள் புல்லட் ரயிலில் பயணிக்க வெறும் ரூ.3000 செலுத்தினால் போதுமானது.


அதன்படி பாந்த்ரா-குரள் பகுதியில் இருந்து தானே வரை பயணிக்க ரூ.250 என துவங்கி, மும்பை-அகமதாபாத் வரை ரூ.3000 வரை வசூளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டப் பணிகள், வரும் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறினால், மும்பையில் இருந்து 508-km  தொலைவில் உள்ள ஆகமதாபாத் நகருக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த புல்லட் ரயில், மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாதில் உள்ள சபர்மதி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது. 


இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் முன்னதகா தெரிவிக்கையில் "மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த புல்லட் ரயில் ஓட்டப்படும். மேலும் இதில் 10 பேட்டிகள் (coaches) பொறுத்தப்பட்டு இருக்கும்" என தெரிவித்திருந்தார்.