இந்தியாவில் இ-பாஸ்போர்ட் தொடர்பான முதல் முன்னெடுப்பு 2017ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன்பிறகு இதுவரை மொத்தம் 20,000 அதிகாரப்பூர்வ மற்றும் தூதரக இ-பாஸ்போர்ட்களை சோதனை அடிப்படையில் இந்தியா வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைக்ரோசிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. 


இதன் மூலம் பாஸ்போர்ட் சேவையில் புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கான அடுத்த தலைமுறை இ-பாஸ்போர்ட்டாக இது இருக்கும். 



இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.  இ-பாஸ்போர்ட் என்பது மின்னணு பாஸ்போர்ட் (Indian Passport) ஆகும்.


பாதுகாப்பு அலுவலகங்களுக்குச் சொந்தமான சிப் மூலம் படிக்கக்கூடிய மின்னணு அமைப்புடன், தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்பதற்கான உயர்நிலை ரகசியத்தன்மை மற்றும் நடைமுறைத்தன்மையைக் கொண்டது ஈ-பாஸ்போர்ட். 


ALSO READ |  தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை சேர்ப்பது எப்படி?


பெரும்பாலும், எல்லா நாடுகளிலும் குடிமக்களுக்கான இயந்திரம் படிக்கக்கூடிய பாஸ்போர்ட்டுகள் உள்ளன, அவை அடையாளப் பக்கத்தில் அச்சிடப்பட்ட தகவலைக் கொண்டு செல்கின்றன, இது தரவுப் பக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


டிஜிட்டல் பாஸ்போர்ட் (Digital Passpport) பாரம்பரிய பாஸ்போர்ட்டைப் போன்றது. பயண விவரங்களுடன் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் தனிப்பட்ட தகவல்களையும் கொண்டு செல்லும் சிப் மட்டுமே இதில் கூடுதலாக இருக்கும்.


இ-பாஸ்போர்ட் மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயோமெட்ரிக்ஸை உள்ளடக்கியது. இ-பாஸ்போர்ட்டில் உள்ள சிப், சில நிமிடங்களில் விமான நிலைய கவுண்டரில் தரவை தெரிவிக்கும் மற்றும் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.


நாசிக்கில் உள்ள இந்தியன் செக்யூரிட்டி பிரஸ்ஸுக்கு இ-பாஸ்போர்ட்களை தயாரிப்பதற்காக மின்னணு தொடர்பு இல்லாத இன்லேக்களை வாங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்திய அரசாங்கம் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் தனிநபர்களுக்கு பாரம்பரிய பாஸ்போர்டுகளை வழங்குகிறது. இ-பாஸ்போர்ட்களில் மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம்.


ALSO READ | வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR