ராணுவ பராமறிப்பு பணிகள் மற்றும் மறு விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ள இரு நாட்டின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு அதிகரிக்கும் என தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் இருந்து பணியாற்றும் சூழல் தற்போது இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்டரும் தெரிவித்துள்ளனர்.


இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ உறவுகளை பலப்படுத்தவே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும், தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிகத்தை சமநிலைப்படுத்த இந்த ஒப்பந்தம் என்று பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் ஒருவர் தெரிவித்துள்ளனர்.