2030ம் ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: S&P
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த பத்து ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரத்து குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது என்று S&P அறிக்கை ஒன்று கூறுகிறது.
புதுடெல்லி: பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் (S&P Global Market Intelligence) சமீபத்திய அறிக்கையில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும் உலகப் பொருளாதாரத் தரவரிசையில் இந்தியா தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் பாதையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 2022ல் 3.5 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஜிடிபி இந்த பத்தாண்டுகளின் முடிவில் 7.3 டிரில்லியன் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்&பி அறிக்கை கூறியுள்ளது. மேலும், "இந்த விரைவான பொருளாதார விரிவாக்கம் 2030 ஆம் ஆண்டில் ஜப்பானிய ஜிடிபியை விட இந்திய ஜிடிபியின் அளவை அதிகரிக்கும், இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும்" என்றும் எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் அறிக்கை கூறுகிறது.
வெளிநாட்டு நேரடி முதலீடு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த பத்து ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரத்து குறிப்பிடத்தக்க வகையில் முடுக்கிவிடப்பட்டதற்குக் காரணம் என்றும் அறிக்கை கூறுகிறது. இது நாட்டின் சாதகமான நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளைப் பிரதிபலிக்கிறது. இந்த வளர்ச்சியானது இளைஞர்களின் மக்கள்தொகை விவரம் மற்றும் நகர்ப்புற குடும்ப வருமானங்களில் விரைவான அதிகரிப்பு போன்ற காரணிகளால் உந்தப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சி குறித்து பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனம் மேலும் கூறுகையில், “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022ம் ஆண்டு நிலவரப்படி 3.5 டிரில்லியன் டாலராக இருந்தது. இது 2030-ம் ஆண்டில் 7.3 டிரில்லியன் டாலராக உயரும். இந்த வேகமான வளர்ச்சியின் காரணமாக அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கும்” என S&P அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம்
இந்தியாவில், ஏழ்மை குறைந்து நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உள்நாட்டு தேவை மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. வலுவான டிஜிட்டல் கட்டமைப்பும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக உள்ளது” என்று S&P அறிக்கை தெரிவித்துள்ளது.
வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றால தொடரும் இந்தியா
அடுத்த தசாப்தத்தில் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஆட்டோமொபைல் துறை, எலக்ட்ரானிக்ஸ் போன்ற உற்பத்தித் தொழில்கள் உட்பட பலதரப்பட்ட தொழில்களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கான மிக முக்கியமான நீண்ட கால வளர்ச்சி சந்தைகளில் ஒன்றாக மாறும். மேலும், வங்கி, காப்பீடு, சொத்து மேலாண்மை, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள் போன்றவற்றிலும் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலகவங்கியின் கருத்து
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலகவங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் முன்னதாக குறிப்பிட்டுள்ளன. அதனை உறுதிபடுத்தும் வகையில் வரும் ஆண்டுகளிலும் இந்தியாவின் வளர்ச்சி வேகமானதாக இருக்கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ