நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம்: மோடி
இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும், நாட்டை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும், நாட்டை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
டெல்லியில் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மாணவர் படையினர் அணிவகுத்து வந்தனர். மாணவர் படையினர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினர். பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
தேசிய மாணவர் படையினர் பல்வேறு சாகசங்களையும் செய்து காட்டினார். அவர்களின் சாகசங்களை பிரதமர் மோடி மற்றும் ராணுவ உயரதிகாரிகளும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய மாணவர் படையினரை காணும் போது, தமக்கும் பள்ளிப் பருவ நினைவுகள் வருகின்றன என்றார். தேசிய மாணவர் படையினர் கடந்த ஆண்டில் கேரள வெள்ள நிவாரணப்பணி, சுகாதார இந்திய திட்டம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
உலகமே இப்போது இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறது என்ற பிரதமர், உலகின் உன்னதாக நாடாக மாற இந்தியாவுக்கு அனைத்து சாத்தியங்களும் உள்ளன என்றார். வாய்ப்புகளை சாத்தியமாக்கும் வல்லமையையும் நாடு இப்போது பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரமோ, பாதுகாப்போ எந்த துறையிலும் நாட்டின் வல்லமை அதிகரித்துள்ளது என்ற பிரதமர் மோடி, அமைதியை விரும்பினாலும், நாட்டை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாங்காது என்றார். உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளிடம் மட்டுமே உள்ள அணு ஆயுத வல்லமை இந்தியாவிடமும் உள்ளது என்று அவர் கூறினார்.
நாடு பாதுகாப்பாக இருந்தால் மட்டும் இளைஞர்களின் கனைவு நனவாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். எனவே நாட்டை மேலும் வலிமை மிகுந்த தாக மாற்ற வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.