இந்திய ராணுவ தரைப்படை, விமானப்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு புதிய தளபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
புதுடெல்லி: இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு புதிய தளபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் தரைப்படை தளபதியாக பிபின் ராவத்தும் விமானப்படையின் தளபதியாக பி.எஸ். தனோவாவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர் அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சு நேற்று மாலை செய்யப்பட்டது.
ராணுவ தளபதி தல்பீர் சிங் மற்றும் விமானப்படை தளபதி அரூப் ராஹாவின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் தற்போது துணை தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் பிபின் ராவத், தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் தற்போது விமானப்படையில் துணை தலைமை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா, தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரின் நியமனம் குறித்து மத்திய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் வருகின்ற 31-ம் தேதி புதிய பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.