மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா: பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்
இந்திய சீன படைகளுக்கு இடையே லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் எனப்படும் LAC-யில் மோதல் ஏற்பட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி: இந்திய எல்லைக்கு அருகில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவதும், எல்லையைத் தாண்ட முயற்சிப்பதும் அண்டை நாடான சீன ராணுவத்தின் வழக்கமாகி விட்டது. எனினும், சீன ராணுவத்தின் அனைத்து வித தேவையற்ற நடவடிக்கைகளுக்கும் இந்தியா வலுவான பதிலடியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன (China) ராணுவத்தின் சமீபத்திய அத்துமீறல்கள் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் சில சீன துருப்புக்கள் எல்லை தாண்டின. இவர்களது செயலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து இந்திய சீன படைகளுக்கு இடையே லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் எனப்படும் LAC-யில் மோதல் ஏற்பட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பைச் சேர்ந்த அப்பகுதிகளின் கமாண்டர்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்த பிறகு, துருப்புகளுக்கு இடையிலான மோதல் நின்றது.
ALSO READ: சதிகார சீனா 2025-க்குள் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துவிடும்: பதட்டத்தில் தைவான்
இந்த மோதல் சில மணிநேரம் நீடித்தது. பின்னர் இரு தரப்பும் பின் வாங்கிச் சென்றன. அந்த இடத்தில், இந்திய வீரர்கள் சீன வீர்ரகளை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். மேலும் இருதரப்புக்கும் இடையே நடந்த இந்த தாக்குதலில் இந்திய (India) பாதுகாப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படாததால், நாடுகளுக்கு இடையே எல்ஏசி பற்றிய கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வருகிறது.
இரு நாடுகளுக்கிடையில் இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றினால் மாறுபட்ட கருத்துகள் அதிகமாகியிருக்கும் இந்த பகுதிகளில் அமைதி சாத்தியபடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கூடுதலாக, இரு தரப்பினரும் தங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை வரையில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சந்தித்துக்கொள்ளும் நிலை வரும்போது, ஏற்கனவே உள்ள நெறிமுறைகளின்படி நிலைமை நிர்வகிக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ: சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR