கேரளா வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் ICG வீரர்கள்!
கேரளா வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை, தங்களது உயிரை பணையம் வைத்து இந்திய கடற்படை வீரர்கள் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது!
கேரளா வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை, தங்களது உயிரை பணையம் வைத்து இந்திய கடற்படை வீரர்கள் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது!
கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 370-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
தற்போது கேரளா மாநிலத்தில் பருவமழை தாக்கம் குறைந்துள்ள நிலையில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளது. எனினும் 10 மாவட்டங்களில் Orange Alert செயல்பாட்டிலேயே உள்ளது.
எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. இன்று காலை பாலக்காடு மாவட்டத்தில் பேரிடர் மீட்பு படையினர் 10 சடலங்களை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலம் கிழக்கு காடங்களூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த குடும்பத்தினரை இந்திய கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!