கொல்கத்தாவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது மனைவியுடன் இவர் எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்ட போது, பர்தா அணியவில்லை என விமர்சனங்களை சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


செய்தியாளர்கள் அவரை தொடர்புக்கொண்டு கேட்ட போது அவர் கூறியது,  


ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை தவறாகவும் பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்த ஷமி குடும்பத்தினர் பேச்சை கேட்டு என்னை கடுமையாக தாக்கினார். இவர்கள் என்னை கொல்ல முயற்சிக்கிறது. எனக்கு பல இன்னல்கள் தந்த போதிலும், நான் எனது குடும்பத்துக்காகவும், குழந்தைகாகவும் பொறுத்துக் கொண்டேன். அவர்(ஷமி) தன் தவறை திருத்திக் கொள்ளவார் என எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் அவர் திருந்தவில்லை. அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் செய்தியாளரிடம் கூறினார். 


இச்சம்பவத்தை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். 


அதில் கூறியதாவது:-


ஹலோ, நான் முகமது ஷமி,


தற்போது நடைபெறும் சம்பவம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருக்கிறது. என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும்" முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.


 



 


முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜகான், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.