புதுடெல்லி: இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தலில் 17வது மக்களவை தேர்தலில் தான் அதிக செலவு செய்யப்பட்டதாக சிஎம்எஸ் என்ற தனியார் முன்னணி ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய நாடளுமன்றத்துக்கான 17_வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை என மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 


அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தை பொருத்த வரை திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது.


தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தொகுதிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட வேண்டும் என்ற வரையறை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அந்த வகையில் நடத்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் மொத்தம் எவ்வளவு செலவானது என்ற விவரத்தை சிஎம்எஸ் (Center for Media Studies) என்ற தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதில், நடந்து முடிந்த 17_வது மக்களவை தேர்தலுக்காக மொத்தமாக ரூ.60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடந்த முடிந்த தேர்தல்களிலேயே செலவுகள் மிகுந்த தேர்தலாக 17_வது மக்களவைக்கான தேர்தல் தான் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதை செலவை 2014 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும் போது, 2019 மக்களவை தேர்தலில் இரு மடங்கு அதிகமாக செலவு செய்யபட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


அதாவது, சராசரியாக வாக்கு ஒன்று ரூ.700 வீதம், ஒரு மக்களவைத் தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்திய தேர்தல்களே உலகிலேயே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


17_வது மக்களவைத் தேர்தலில் ஆனா மொத்த செலவில் பாஜகவின் பங்கு 45 சதவீதம் எனவும், காங்கிரஸ் பங்கு 40 சதவீதம் என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.