இந்திய விமானியை பத்திரமாக ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை
பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் இந்திய விமானிக்கு பாதுகாப்பான திரும்பப் பெற வெளியுறவு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்
பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் இந்திய விமானிக்கு பாதுகாப்பான திரும்பப் பெற வெளியுறவு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்
விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை உடனடியாக, பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியத் தூதர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நேற்று எல்லையில் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சித்தன. அதில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இந்த சூழலில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று பாகிஸ்தானின் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அபிநந்தன் பாதுகாப்பாக இருப்பதாக பாகிஸ்தான் நேற்று வீடியோ வெளியிட்டது. அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்பதற்கு இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், அபிநந்தனை உடனடியாக, பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.