சமுத்ரா சேது திட்டத்தின் ஒரு பகுதியாக, மாலத்தீவில் இருந்து 202 இந்திய பிரஜைகளை ஏற்றிச் வந்த இந்திய கடற்படைக் கப்பல் INS மாகர் செவ்வாய்க்கிழமை மாலை துறைமுக நகரம் கொச்சியில் வந்து நின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கடற்படையால் மாலத்தீவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது வெளியேற்றம் இதுவாகும், முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை INS  ஜலாஷ்வா 698 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது.


INS மாகர் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை துவங்கி சுமார் 493 கடல் மைல்களை கடந்த இந்தியா வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.


கப்பலில் 24 பெண்கள் (இரண்டு கர்ப்பிணி) மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு வந்தவர்களில் கேரளாவைச் சேர்ந்த 93 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 81 பேரும், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.


இந்த பயணிகளுக்கான நெறிமுறை என்னவென்றால், மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.


COVID-19 இன் அறிகுறிகளை யாராவது காட்டினால், அத்தகைய நபர்கள் நேரடியாக இங்குள்ள கோவிட் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது பொதுவான வழிகாட்டுதலாகும்.


இதற்கிடையில், INS ஜலாஷ்வா தனது இரண்டாவது பயணத்தில் 700 இந்தியர்களை மாலத்தீவில் இருந்து கொச்சிக்கு அழைத்து வரும் முயற்சியை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.