நடைமுறைக்கு வந்தது நாடு முழுவதும் 267 ரயில்கள் நேர மாற்றம்!
நாடு முழுவதும் 267 ரயில்களின் நேரத்தை இந்தியன் ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
நாடு முழுவதும் 267 ரயில்களின் நேரத்தை இந்தியன் ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய நேரம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி புதுடெல்லி - சண்டிகர் - புதுடைல்லி மற்றும் புதுடெல்லி - லக்னோ - புதுடெல்லி ஆகிய வழித் தடங்களில் 2 தேஜஸ் ரயில்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அதேப்போல் டேராடூன் - டெல்லி நந்தா தேவி எக்ஸ்ப்ரஸ் ரயிலை ராஜஸ்தானின் கோட்டா வரைக்கும், அலிகார் - மொராதாபாத் பயணிகள ரயிலை கஜ்ராலா வரைக்கும் வடக்கு ரயில்வே நிர்வாகம் நீட்டித்து உத்தவு பிரப்பித்துள்ளது.
மொத்தம் 148 ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 93 ரயில்களை வழக்கத்தை விட முன் கூட்டியும், 55 ரயில்கள் வழக்கத்தை விட சற்று காலம் தள்ளியும் இயக்கப்படுகின்றன.
இதேபோன்று 118 ரயில்களின் வருகை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 57 ரயில்கள் முன்கூட்டியும், 61 ரயில்கள் காலம் தள்ளியும் வழக்கத்திற்கு மாற்றமாக வந்தடைகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரையில் கோவையில் இருந்து சொரனுார் புறப்படும் பயணிகள் ரயிலின்(வண்டி எண்: 66605) நேரம் காலை, 9:45 மணியில் இருந்து, 10:00 மணியாகவும், கோவையில் இருந்து கண்ணுார் புறப்படும் பயணிகள் ரயில்(56651) நேரம் மதியம், 2:00-லிருந்து, 2:15 மணிக்கும், கோவையில் இருந்து புறப்படும் பைக்கனேர் எக்ஸ்பிரஸ் ரயிலின்(22476) நேரம் மதியம், 3:20-லிருந்து, 3:10 மணியாகவும் மாற்றப்பட்டுள்ளது.
அதேவைளையில் கோவையில் இருந்து திருச்சூர் புறப்படும் ரயில்(56605) நேரம் மாலை, 4:40-க்கு பதிலாக, 4:30 மணியாகவும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்படும் பயணிகள் ரயில்(56150) நேரம் மதியம், 3:15-க்கு பதிலாக, 3:25-மணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை புறப்படும் பயணிகள் ரயில்(56151) நேரம் மாலை, 4:30-லிருந்து, 4:35 மணியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கோவைக்கு புறப்படும் லோக்மானியதிலக் எக்ஸ்பிரஸ்(11013) ரயில் நேரம் காலை, 7:15 மணியில் இருந்து, 7:00 மணியாகவும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்(12675) நேரம் மதியம், 1:55-க்கு பதிலாக, 2:05 மணியாகவும், சென்னை சென்ட்ரலில் இருந்து, மேட்டுப்பாளையம் புறப்படும் ரயில்(12671) நேரம் காலை, 6:05-க்கு பதிலாக, 6:15 மணியாகவும் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்(12243) ரயில் மதியம், 2:05-க்கு பதிலாக, 2:20 மணியாகவும், ஈரோட்டில் இருந்து கோவை புறப்படும் பயணிகள் ரயில்(66601) நேரம் காலை, 9:40-லிருந்து, 9:55 மணிக்கும் என, பல்வேறு ரயில்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.