Indian Railways: யாருக்கெல்லாம் சலுகை விலையில் ‘டிக்கெட்’! ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
இந்திய ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ரயில் டிக்கெட்டுகளில் யாருக்கெல்லாம சலுகை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ரயில் டிக்கெட்டுகளில் எந்த எந்த பயணிகளுக்கு டிக்கெட்டில் சலுகை கிடைக்கும் என்பது குறித்த தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள் பிரிவில் பெண்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், ஆண்களுக்கு 40 சதவீத தள்ளுபடியும் கிடைத்தது. ஆனால் அது கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து நிறுத்தப்பட்டது. இப்போது புதிய விதிகளின்படி, ரயில் டிக்கெட்டுகளில் ரயில்வே யாருக்கு தள்ளுபடி அளிக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்வோம்.
டிக்கெட்டில் யாருக்கு சலுகை கிடைக்கும்?
விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், தியாகிகளின் மனைவிகள், விருது பெற்றவர்கள் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே டிக்கெட்களில் சலுகை கிடைக்கும் என ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. இதில், நோயாளிகள் மற்றும் மாணவர்கள் 11 வகையிலும், மாற்று திறனாளிகள் 4 வகையிலும் சலுகை பெறுகின்றனர்.
மேலும் படிக்க | IRCTC புதிய வசதி! ரயில் பயணத்தின் போது நீங்கள் விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்
மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை பொறுத்தவரையில், பொதுப் பிரிவின் கீழ் வரும் மாணவர்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பில் 50 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மறுபுறம், எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களை பொறுத்தவரை, இவர்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், UPSC மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையங்களின் மெயின் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகை
கடுமையான நோய்களை எதிர்கொள்ளும் பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தலசீமியா, இதயம் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்லீப்பர், ஏசி நாற்காலி வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு 75 சதவீத சலுகை கிடைக்கும். அதே நேரத்தில், முதல் மற்றும் இரண்டாவது ஏசி டிக்கெட்டுகளில், 50 சதவீத தள்ளுபடி பெறுகிறார்கள்.
புற்றுநோயாளிகளுக்கு கிடைக்கும் சலுகை
இது தவிர, புற்றுநோய் பிரச்னையை எதிர்கொள்ளும் பயணிகளுக்கும் முதல் வகுப்பில் 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் ஏசிக்கான டிக்கெட்டுகள் முற்றிலும் இலவசம் மற்றும் இரண்டாவது ஏசியில் 50 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.
மேலும் படிக்க | நம்ம சென்னையில் வந்தே பாரத் ரயில்... சில முக்கிய தகவல்கள்!
மேலும் படிக்க | Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ