நாடுமுழுவதும் 6000 ரயில் நிலையங்களில் Wifi வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவிதுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று புதுடெல்லியல் செய்தியாளர்களை சந்தித்த பியுஷ் இதுகுறித்து தெரிவிக்கையில்...


"இரயில் நிலையங்களில் Wifi வசதியினை ஏற்படுத்துவதன் மூலம் பயணிகள் மட்டும் அல்லாமல் ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்களும் பயன்பெறுவர். 


பசுமை கழிவறைகளை பயன்படுத்தும் ரயில் பயணிகள், கழிவறைகளை குப்பகளால் அதன் தன்மையினையே கெடுத்துவிடுகின்றனர். எனவே பசுமை கழிவரை நோக்கம் நிறைவேறவில்லை.


இதன்காரணமாக விமானங்களில் உள்ளது போன்று உறிஞ்சும் தன்மை கொண்ட Bio Vacuum-Toilet எனப்படும் உயிரி வெற்றிட கழிப்பறைகள், விரைவில் ரயில் பெட்டிகளில் அமைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்