காலையில் 71.27 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, தற்போது அமெரிக்க டாலருக்கு நிகராக 71.56 ஆக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது நாட்டின் ஜிடிபி நல்ல நிலையில் இருந்தும், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை ஏன் சந்திக்கிறது. டாலரின் மதிப்பு ஏன் உயர்கிறது. இப்படி பல கேள்விகள் மனதில் எழுவதை தடுக்க முடியவில்லை.


சில நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் நம்முடன் வர்த்தகம் செய்யும் நாட்டின் பொருளாதார பாதிப்பு போன்ற பிரச்சனைகளால், இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இது மேலும் வீழ்ச்சியடையலாம் என அஞ்சப்படுகிறது.


வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, இந்த சரிவு கடந்த மாதம் துவங்கி இன்று வரை தொடர்கிறது. 


இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு 71.27 என பெரும் வீழ்ச்சியுடன் துவங்கியது. 


தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் .29 பைசா சரிந்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 71.56 ஆகா உள்ளது. 


 



நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறினாலும், அடுத்த சில மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் எனவும் கூறியுள்ளனர்.