இந்திய ரூபாய் சரிவு அச்சப்பட தேவையில்லை - மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி
நமது நாட்டின் ஜிடிபி நல்ல நிலையில் இருக்கிறது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: நமது நாட்டின் ஜிடிபி நல்ல நிலையில் இருக்கிறது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
சில நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு மற்றும் நம்முடன் வர்த்தகம் செய்யும் நாட்டின் பொருளாதார பாதிப்பு போன்ற பிரச்சனைகளால், இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இது மேலும் வீழ்ச்சியடையலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, சர்வதேச அளவில் ஏற்ப்பட்டுள்ள சில காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை காட்டிலும், மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு அதிக அளவில் சரிவடைந்துள்ளது. எனவே இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, எனவே ரூபாயின் மதிப்பு சரிவுக்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.