உயிரி எரிபொருளில் இயங்கக்கூடிய விமான பரிசோதனை வெற்றி..!
இந்தியாவிலேயே முதன் முறையாக காட்டாமணக்கு எண்ணெய் (பயோ எரிபொருள்) மூலம் விமானத்தை இயக்கி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பரிசோதனை செய்தது...!
இந்தியாவிலேயே முதன் முறையாக காட்டாமணக்கு எண்ணெய் (பயோ எரிபொருள்) மூலம் விமானத்தை இயக்கி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பரிசோதனை செய்தது...!
500 குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் கடந்த சில நாட்களாக உயிரி எரிபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த தயாரிப்பு பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, உயிரி எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய நாட்டின் முதலாவது விமானத்தின் சோதனையோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், சுரேஷ் பிரபு மற்றும் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உயிரி எரிபொருள் நிரப்பப்பட்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானத்தின் முதலாவது பயணம் டேராடூன் முதல் டெல்லி வரை தொடர்ந்தது. 75 சதவிகிதம் டர்பைன் மற்றும் 25 சதவிகிதம் உயிரி என கலப்புத்தன்மை அடிப்படையில் இந்த புதிய எரிபொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இது பகுதியளவாக இருந்தாலும் கூடிய விரைவில் முழுமையான விகிதத்தில் உயிரி எரிபொருள் பயன்பாடு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.