2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தனிநபர் வருமான வரி வரம்பு தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை என்றார்.


இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் கூறி வருகின்றனர்.


மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:- நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் அருண் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அருண் ஜெட்லி தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.



மேலும் அவர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்வு மற்றும் எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்வு என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.