புதுடெல்லி: அயோத்தியில் மசூதி கட்டும் அறக்கட்டளை தனது உத்தியை மாற்றியது பல கேள்விகளை எழுப்புகிறது. ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ​​​​ராமர் கோயில் நிர்மாணம் தொடர்பாக அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மசூதிக்கு ஐந்து ஏக்கர் இடத்தை வழங்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அயோத்தி அருகே தன்ணிபூர் (dhannipur) கிராமத்தில் மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு நிலம் ஒதுக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுன்னி வக்ஃப் வாரியத்திடம் வழங்கப்பட்ட இந்த ஐந்து ஏக்கர் நிலம் வேளாண் துறையின் 25 ஏக்கர் பண்ணை இல்லத்தின் ஒரு பகுதியாகும். தற்போது, அயோத்தி மசூதி கட்டும் அறக்கட்டளை உத்தியை மாற்றியது. அதிநவீன மசூதிக்கு பாபர் அல்லது வேறு ஏதாவது ஒரு மன்னரின் பெயர் வைக்கபடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது.


மசூதியை நிர்மாணிப்பதற்கான பணியை மேற்கொள்வதற்காக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை (Indo islamic cultural foundation)  சுன்னி வக்ஃப் வாரியம் (Sunni Waqf Board) உருவாக்கியது.


ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தன்னிப்பூரில் வழங்கப்பட்ட நிலத்தில், மசூதி, மருத்துவமனை, சமுதாய சமையல் கூடம் உள்ளிட்ட பெரிய திட்டத்தைக் கட்டும் பணியை இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.


ஆனால், தற்போது, பணப்பற்றாக்குறையால் தங்களது கட்டுமான உத்தியை மாற்றிவிட்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


அறக்கட்டளை இப்போது மசூதி மற்றும் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பிற கட்டிடங்களை ஒரே நேரத்தில் கட்டுமானம் செய்யாமல், அவ்வப்போது, கொஞ்சம் கொஞ்சமாக கட்ட திட்டமிடுகிறது. ஏனென்றால், முழுத் திட்டத்தையும் ஒரே நேரத்தில் தொடங்குவதற்கு, வளர்ச்சிக் கட்டணம் உட்பட பல கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், இதற்கு அறக்கட்டளையிடம் நிதி இல்லை.


மேலும் படிக்க | அவதூறு வழக்கில் தண்டனைக்கு தடையில்லை: HC தீர்ப்புக்கு SCஇல் ராகுல் மேல்முறையீடு


'தற்போதைக்கு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளோம்'
'இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை' செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அதர் ஹுசைன் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார். "நிதி பற்றாக்குறையால் கட்டுமான திட்டத்தை கிடப்பில் வைத்துள்ளோம். சிரமம் இருந்தாலும், இந்தத் திட்டத்தை நிறுத்தாமல், உத்தியை மாற்றி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து செயல்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


முதலில் மசூதி 
'இப்போது மருத்துவமனைக்கு பதிலாக, முதலில் மசூதியின் புதிய வரைபடத்தை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்பிப்போம். மசூதி கட்டுவதற்கு ஒப்பீட்டளவில் குறைவான பணம் செலவழிக்கப்படும், ஏற்பாடு செய்வது எளிதாக இருக்கும். மசூதி மிகவும் சிறியதாக இருப்பதால், மசூதியின் பெயரால் இந்த திட்டம் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் மருத்துவமனை கட்டுவதைவிட, மசூதி கட்டுவதற்கு அறக்கட்டளை முன்னுரிமை அளித்து வருகிறது” என்று அதர் ஹுசைன் தெரிவித்தார்.


மசூதி கட்டுவதற்கான செலவு முழுத் திட்டத்தின் மொத்த செலவில் ஐந்து சதவீதம் மட்டுமே இருக்கும். சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்த மசூதிக்கு 8 முதல் 10 கோடி ரூபாய் செலவிடப்படும். மசூதியின் மின் தேவைகள் அதன் குவிமாடத்தில் நிறுவப்படும் சோலார் பேனல்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும்.


300 கோடியில் ஒரு லட்சிய திட்டம்
மசூதிக்கு முன்பாக மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்ற திட்டம் முதலில் போடப்பட்டது. ஆனால் மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஆகும். தற்போது, மசூதி கட்டப்பட உள்ள இடத்தில் ஏற்கனவே பல மசூதிகள் உள்ளன. எனவே, முதலில் மருத்துவமனை, சமுதாய சமையல் கூடம் கட்ட வேண்டும் என்று அறக்கட்டளை தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது அறக்கட்டளையிடம் போதுமான பண வசதி இல்லை.


மேலும் படிக்க | தலித்தின் காதில் சிறுநீர் பெய்து அட்டூழியம் செய்த நண்பர்! அதிர்ச்சி தரும் சண்டை


உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் தலைவரும், இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான ஜுஃபர் ஃபரூக்கி கூறுகையில், “தற்போது இந்தத் திட்டத்துக்கான நிதியை சேகரிக்க தனிப்பட்ட அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அறநிலையத்துறையினர் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்வார்கள்.தன்ணிப்பூரில் முழு திட்டத்தையும் முடிக்க பலகோடி ரூபாய் தேவைப்படும் என்றும், வாரியம் இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டவிருக்கிறது.  


உச்ச நீதிமன்றம் 2019-ல் வழஙிய வரலாற்றுத் தீர்ப்புக்கு இணங்க, அயோத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு அயோத்தியின் சோஹாவால் தாலுகாவில் அமைந்துள்ள தன்னிபூர் கிராமத்தில் நிலம் வழங்கியது. ஜூலை 2020 இல், வக்ஃப் வாரியம் மசூதியைக் கட்டுவதற்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.


ராமர் கோவில் கட்டும் பணி 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகத் திறக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மறுபுறம், தன்னிப்பூரில் மசூதி கட்டும் பணி இன்னும் தொடங்கப்படவேயில்லை.


மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு அணுமின் நிலையம் கட்ட உதவும் சீனா! நன்றியில் நெகிழும் பாக் பிரதமர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ