இந்தியா-பாக்., எல்லையில் பல்வேறு  பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-


இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லைகளிலுள்ள வேலியை வெட்டிவிட்டு பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர். இதனைத் தடுக்க இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சென்சார், கண்காணிப்பு கேரமாக்கள், ரேடார் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வேலிகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும். இதற்காக நவீன வேலிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் அதனை எல்லையில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் இந்திய-பாகிஸ்தான் எல்லை இருக்கின்றது. எனவே இந்த எல்லைப் பகுதிகளில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நவீன வேலிகள் அமைக்கப்பட்டுவிடும் என அவர் கூறினார்.