சிமெண்ட் கலவை வாகனத்தில் வந்த 18 பேர்: இந்தூர் போலீசாரிடம் பிடிபட்டனர்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிமெண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை கலக்கும் கலவை இயந்திரத்தில் வந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் (Coronavirus) ஊரங்குக்கு மத்தியில் உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு வீடு திரும்ப விரும்பிய 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று காலை மத்திய பிரதேசத்தில் ஒரு நெடுஞ்சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை கலக்கும் கலவை இயந்திரத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், நாடு தழுவிய ஊரடங்கின் போது சட்டவிரோதமாக மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று சோதிக்க லாரியை நிறுத்தினர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் சென்ற கான்கிரீட் சிமெண்ட் கலவை கொண்டு செல்லும் வாகனத்தை போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சிமெண்ட் மிக்ஸிங் டேங்கிற்குள் 18 நபர்கள் மறைமுகமாக பதுங்கி சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவிற்கு இவ்வாறாக மறைந்து சென்றுள்ளனர்.
ALSO READ: மகாராஷ்டிராவில் மீண்டும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் கூடினர்
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ட்ரக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிமெண்ட் கலவை டேங்கிற்குள்ளிருந்து வரிசையாக தொழிலாளிகள் இறங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், நாடு தழுவிய ஊரடங்கை மே 17 வரை நீட்டிப்பதாக அறிவித்ததிலிருந்து, பல்வேறு மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கான பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களின் ஆபத்து விவரக்குறிப்பை மூன்று வெவ்வேறு மண்டலங்களாக - சிவப்பு (ஹாட்ஸ்பாட்), பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக - இந்த கட்டுப்பாடுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன, எனவே அந்தந்த மண்டலங்களில் அனுமதிக்கப்படும் நடவடிக்கைகளை அனுமதிக்கிறது.