எதிர்காலத்தில் ஏற்படும் எந்த விதமான சச்சரவுகளையும் தவிர்ப்பதற்காக ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காக, ராம் ஜன்மபூமி தொடர்பான வரலாற்று தகவல்கள் மற்றும் உண்மை தகவல்களை உள்ளடக்கிய ஒரு டைம் காப்ஸ்யூல் 2000 அடி கீழே பதிக்கப்படும் என்று நேற்று செய்தி வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி( New Delhi): “ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராம் கோயில் கட்டுமானத் தளத்தில் டைம் காப்ஸ்யூல் வைப்பது தொடர்பான அனைத்து தகவல்களும் தவறானவை” என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.


ALSO READ | ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண்ணை எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்


செய்தியாளர்களிடம் பேசிய ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், இதுபோன்ற எந்த வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


"உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்ற வழக்கு உட்பட ராம ஜென்மபூமிக்கான போராட்டம் என்பது  தற்போதைய தலைமுறைக்கும்  மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு படிப்பினை என்று கூறலாம். ராம் கோயில் கட்டுமான இடத்தில் ஒரு டைம் காப்ஸ்யூல் சுமார் 2,000 அடி கீழே  வைக்கப்படும். எனவே, எதிர்காலத்தில் கோயிலின் வரலாற்றைப் பற்றி படிக்க விரும்பும் எவருக்கும், ராம  ஜென்மபூமி தொடர்பான  உண்மை தக்வல் கிடைக்கும். இதனால் புதிய சர்ச்சைகள் எழாது”என்று ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபால் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


டைம் காப்ஸ்யூல்  செப்பு தகட்டிற்குள் வைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.


ALSO READ | உயர் செயல் திறன் கொண்ட கோவிட் -19 பரிசோதனை அமைப்பை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்


பிரதமர் மோடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக கோயில் அறக்கட்டளையின் தலைவர் மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர்  இந்த நிகழ்வில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமி பூஜைக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.