ராஜஸ்தானில் குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த யோகா பயிற்சியில் மட்டும் ஒரே இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த யோகா கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிர்வாக குழுவினர் பாபா ராம்தேவிடம் வழங்கினர். 


சர்வதேச யோகா பயிற்சியானது, ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21-ம் தேதி, சர்வதேச யோகா தினமாக, 2015ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, நாடு முழுவதும், 5,000 இடங்களில், சிறப்பு யோகா நிகழ்ச்சிகளுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடுசெய்துள்ளது. அதன்படி, இந்தியா முழுக்க பல இடங்களில் யோகா பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற பொது இடங்களில் மக்கள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது. 


AirIndia பங்குகளை விற்கும் முடிவு ஒத்திவைப்பு -மத்திய அரசு!