கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறை மாவட்ட பிஷபாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இதற்கு முன்னதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இவர் பாதரியராக இருந்த போது கன்னியாஸ்திரியை ஒருவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


இந்த குற்றச்சாட்டினை அடுத்து பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து பதவி விலகினார். எனினும் கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என மறுத்து வருகிறார். 


இவ்வழக்கினை கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை செய்து வருகிறது. 
கடந்த இருவாரங்களுக்கு முன் காவல்துறையினர் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். எனினும் இந்த வழக்கில் பாதரியாரின் மீது நடவடிக்கைகள் எடுக்க தாமதம் காட்டி வரப்படுகிறது என பாதிக்கப்பட்ட கனயாஸ்திரியை உள்பட பலர் போராட்ட களத்தில் இறங்கினர்.


இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட பிராக்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். 



இதற்கிடையில் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குறிய கருத்தினை தெரிவித்து MLA பிசி ஜார்ஜ் தற்போது மேலும் ஒரு சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... "சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டது இருவர், ஆனால் காவல்துறை தற்போது பாதரியாரை மட்டும் குறிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது, மற்றொரு குற்றவாலியான கன்னியாஸ்திரியை விட்டு விட்டது." என தெரிவித்துள்ளார்!