நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதினை நடுவன் அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என புதுவை முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, சினிமா துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில், அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார்.


இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., இந்திய திரைப்பட துறைக்கு கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு, கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட பொன்விழா ஆண்டையொட்டி ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த அறிவிப்பை அடுத்து தலைவர்கள், கலைஞர்கள் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுவை முதல்வரு நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு திரை உலகத்திற்கு பெருமை அளிக்க கூடிய விஷயம் ஆகும், இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர். புதுச்சேரி மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.