ஹைதராபாத் கொடூர சம்பவத்தில்  திறமையான நடவடிக்கை எடுத்ததற்காக ஹைதராபாத் காவல்துறையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசத்தை உலுக்கிய ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது திறமையான நடவடிக்கை எடுத்ததற்காக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ஹைதராபாத் காவல்துறையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டியுள்ளார்.


ஆந்திர மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டை உலக்கிய சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.


இந்த கொடூரமான சம்பவம் குறித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி மேலும் தெரிவிக்கையில்., "முழு பிரச்சினையையும் டிவி மற்றும் செய்தித்தாள்களில் பார்த்தேன். திஷாவின் (ஹைதராபாத் கால்நடை மருத்துவர்) பெற்றோரின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது."


"நான் இரண்டு மகள்களின் தந்தை, எனக்கு ஒரு சகோதரியும் ஒரு மனைவியும் இருக்கிறார்கள்... ஒரு தந்தையாக, இதுபோன்ற ஒரு கொடூரமான சம்பவத்தை நான் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்" என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.


முன்னதாக கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 6) காலை, சைபராபாத் காவல்துறையினர் கால்நடை மருத்துவர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர்.


காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் சம்பவங்களின் காட்சியை மீண்டும் உருவாக்க காவல்துறை குழுவினரால் குற்றவாளிகள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். குற்ற சம்பவ இடத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முயன்றனர். பின்னர் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய தூப்பாக்கி சூட்டில் குற்றவாளிகள் பலியாகினர். இந்த சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர் என சைபராபாத் காவல்துறை ஆணையர் வி.சி.சஜ்ஜனர் குறிப்பிட்டுள்ளார்.


ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தில் வெளிப்புற ரிங் சாலை அருகே கால்நடை மருத்துவரை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் குற்றத்தை மறைக்க இளப்பெண்ணின் உடலை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.


இதற்கிடையில், ஹைதராபாத் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் சைபராபாத் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சந்திப்பது குறித்து விசாரிக்க ராச்சகொண்டா காவல்துறை ஆணையர் மகேஷ் எம் பகவத் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) தெலுங்கானா அரசு அமைத்துள்ளது.


இந்த வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஏற்கனவே ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ள நேரத்தில், SIT-யை அமைப்பதற்கான தெலுங்கானா அரசாங்கத்தின் முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.