அயோத்தி தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலமா இ ஹிந்த் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் வழக்கில், உச்சநீதிமன்றம், கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்புக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், முஸ்லீம்களுக்காக 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.


இந்த நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி,  இந்த வழக்கின் மூல மனுதாரர் எம்.சித்திக் என்பவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அர்ஷ்ஹத் ரஷிதி  மனு தாக்கல் செய்துள்ளார்.