புது டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக சிவில் நிர்வாகத்துக்கு உதவி செய்வதற்காக இந்திய பாதுகாப்புப் படைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் இந்தியாவில் ஊடுருவ 230 பயங்கரவாதிகள் தயார் நிலயில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் அனைவரும் இந்தியாவில் நுழைய திட்டம் தீட்டி உள்ளதாக கூறபப்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இராணுவத்தின் சிறப்புப் படையான கமாண்டோக்களுடனான நெருக்கமான போரில் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளின் குழு தான் முதன்மையானது என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் பல பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் நுழைய காத்திருக்கிறது என்றும் தகவல் கிடைத்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தெரிவித்துள்ளது.


லஷ்கர்-இ-தயிபா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) ஆகிய அமைப்பை சேர்ந்த சுமார் 160 பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி பள்ளத்தாக்குக்குள் ஊடுருவத் தயாராக உள்ளனர் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.


சுமார் 70 ஆயுதமேந்திய மற்றும் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஆற்றுவழியாக இந்தியாவுக்கு நுழைய உள்ளனர். 


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) சமனி-பீம்பர் மற்றும் துத்னியல் பகுதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாகவும், ஜம்மு-கே-க்குள் ஊடுருவ முதல் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல், எல்.ஈ.டி தனது பயங்கரவாத பணியாளர்களை லீப்பா மற்றும் கெல் முறையே லீப்பா பள்ளத்தாக்கு மற்றும் நீலம் பள்ளத்தாக்கில் அனுப்புகிறது.


ஜே & கேவில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான ஊடுருவலை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெம் (JeM) பயங்கரவாதக் குழு பிப்ரவரி முதல் சியால்கோட் துறையில் சர்வதேச எல்லையில் தங்களின் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை பலப்படுத்தி வருகிறது.


2020 பிப்ரவரி 11 அன்று சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தெஹ்ஸில் தஸ்காவின் முண்டேக் கிராமத்தில் உள்ள மார்காஸில் ஆயுதமேந்திய ஜெ.எம் ஜிஹாதிகள் ஒரு குழு வந்ததாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.