J&K: பாரமுல்லா பயங்கரவாதி தேடுதல் பணி; இணைய சேவை முடக்கம்
பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது...!
பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது...!
ஜம்மு காஷ்மீரில் சில பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சமீபகாலமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவலை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் பணியை தொடர்ந்து, அப்பகுதியில் இணையதளசேவை முடக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஜம்மு சோதனைச் சாவடியில் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு, லாரி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது...!