ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலரின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ராணுவ பாதுக்காப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புல்வாமா முழுக்க சல்லடை போட்டு தேடியதில் ஷீவாக்லன் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நடு இரவில் சுற்றிவளைத்து தாக்குதலுக்கு தயாரானார்கள். அப்போது பயங்கரவாதிகளும் சுதாரித்து கொண்டு பதிலடி கொடுக்க துணிந்தார்கள். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பல மணி நேரமாக நீடித்த அந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானியர் உட்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தொடர்ந்து விடிய விடிய பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே, கந்தர்பால் மாவட்டத்தில் அதிகாலை நேரம் இன்னொரு பயங்கரம் அசம்பாவிதம் அரங்கேறியது. அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் திடீரென்று பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைப்பெற்றதில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லாப்பட்டார்.



இதே போல் குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், ஒரே நாளில் 4 பயங்கரவாதிகளை திட்டமிட்டு கச்சிதமாக சுட்டுவீழ்த்தப்பட்டனர்.


மேலும் படிக்க | தமிழகத்தில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி - சாதித்த மருத்துவத்துறை



மேலும் படிக்க | ஹிட்லர் - முசோலினியின் அவதாரம் ஸ்டாலின்: ஜெயக்குமார் கடும் விமர்சனம்


இச்சம்பவத்தால் காஷ்மீர் முழுக்க பதட்டம் அதிகரித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR