ஜம்மு காஷ்மீரில் இராணுவ முகாமில் குண்டு வெடித்தில் 2 வீரர்கள் படுகாயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் முகாமில் குண்டு வெடித்தில் 2 இராணுவ வீரர்கள் படுகாயம் எனத் தகவல்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தின் கண்டவாரா பகுதியில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் இந்திய இராணுவ முகாமுக்குள் குண்டு வெடுத்தது எனத் தகவல்கள் வந்துள்ளது. இந்த ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் முகாமில் நடந்த குண்டு வெடிப்புகளில் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மர்மமான முறையில் வெடி விபத்து நடந்தது என்றும், இந்த குண்டு வெடிப்பு தற்செயலாக நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விரிவான தகவலுக்காக காத்திருங்கள்.