பீகார் ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மகன் இறந்த நிலையில் தண்டவாளத்தில் கிடந்தார்
பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ பிமா பாரதியின் மகன் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னாவின் ராஜேந்திர நகர் டெர்மினல் அருகே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பாரதியின் மகன் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.
ஏஎன்ஐ தகவலின் படி, பாட்னாவின் ராஜேந்திர நகர் முனையம் அருகே நலாந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முன்னால் இருக்கும் ரயில் பாதையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பாரதியின் மகன் இறந்த நிலையில் கிடந்தார். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தெரியவில்லை என தகவல் தந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, பாட்னா (சென்ட்ரல் ரேஞ்ச்) துணை ஜெனரல் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் ஆய்வுக்காக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும் ஆதாரங்களை திரட்ட போலீஸ் நாய் பயன் படுத்தப்பட்டு உள்ளது.
முதற்கட்ட விசாரணையின் படி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பாரதியின் மகன் தீபக், தனது நண்பரின் வீட்டில் நடைபெற்ற ஃபார்ட்டியில் கலந்துக்கொண்டு வரும்போது இச்சம்பவம் நடைபெற்றது என தகவல் கிடைத்துள்ளது. தீபக்கின் கொலைக்கு பின்னல் வேற காரணம் ஏதாவது இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மகன் தற்கொலை செய்துக்கொள்ள வில்லை. அவர் கொல்லப்பட்டு உள்ளார் என ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பாரதி ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிஐஜி ராஜேஷ் குமார், பிரேத பரிசோதனை பிறகு தான் உண்மையான நிலவரம் தெரியவரும். அதுவரை இது கொலையா? தற்கொலையா? என உறுதியாக கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜாஷ்வி யாதவ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இது அதிர்ச்சி சம்பவம், ஜேடியு எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சரின் மகன் பாட்னாவில் இறந்து கிடந்தார். அதைப் பற்றி கேள்வி பட்டதும் நான் வருத்தப்பட்டேன்.
பீகார் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளது என கூறியுள்ளார்.