திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு நேரடி விமானத்தினை இயங்க Jet Airways திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் விமான சேவை நிறுவனமான Jet Airways ஆனது உள்ளூர் விமான சேவைகளை அதிகப்படுத்தும் விதமாக 144 புது விமான சேவைகளை (வாராந்திர) சேவையினை துவங்கவுள்ளது. 


இதுகுறித்து Jet Airways வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... உள்ளூர் விமான சேவையினை அதிகரிக்கும் விதமாக நிறுத்தம் இல்லா நேரடி விமான சேவை, ஒரு நிறுத்த விமான சேவையென இந்திய நகரங்களை இணைக்கும் விதமாக புதிதாக 144 வாராந்திர விமான சேவைகள் துவங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளது.


இதன்மூலம் வடகிழக்கு மாகானங்களின் போக்குவரத்தினை பலப்படுத்த இயலும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 3 முறை இம்பால் - டெல்லி, வாரத்திற்கு 4 முறை பாட்னா- ராய்பூர் வழித்தடத்திலும் விமான சேவைகள் இயக்கப்படவுள்ளது.


அதேப்போல் தமிழகத்தின் திருச்சியிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி., தினமும் திருச்சியில் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W358, காலை 11.20 மணியளவில் மும்பை வந்தடையும். பின்னர் மும்பையில் இருந்து 12.25 மணிக்கும் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு மீண்டும் 14.10 மணியளவில் திருச்சி வந்தடையும்.


அதேவேலையில் எதிர் வழித்தடத்தில் பயணிக்கவுள்ள 9W311 விமானமானது மாலை 14.10 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு, மாலை 16.50 மணியளவில் மும்பை சென்றடையும் பின்னர் அங்கிருந்து 18.00 மணியளவில் புறப்பட்டு மாலை 20.20 மணியளவில் டெல்லி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!


வரும் மார்ச் 25 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய சேவைகள் திருச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என Jet Airways தெரிவித்துள்ளது!