தீபாவளி கொண்டாடத்தினை முன்னிட்டு Jet Airways விமான டிக்கெட் விலையில் சுமார் 30% தள்ளுபடி வழங்கப்படும் என Jet Airways தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கோளாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக விமான டிக்கெட் விலையில் சலுகையினை அறிவித்துள்ளது Jet Airways நிறுவனம். இந்த சலுகை விற்பனையானது வரும் நவம்பர் 11-ஆம் நாள் வரை நடப்பில் இருக்கும் எனவும் Jet Airways தெரிவித்துள்ளது.



மளிவு விலை விமான சேவைகளில் ஒன்றாக கருதப்படும் Jet Airways நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பண்டிகை காலங்களில் அதிரடி சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த தீபாவளி சலுகையினை அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் தனது விமான சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த Jet Airways, தங்களது வாடிக்கையாளருக்கு குலுக்கல் முறையில் மாருதி சுசூகி வாகனம் வழங்கியது.


இந்நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு 30% தள்ளுபடி விற்பனையினை Jet Airways அறிவித்துள்ளது. இந்த சலுகையினை பயன்படுத்த விரும்பும் பயணிகள் தங்களுடைய பயணத்திற்கு 8 நாட்கள் முன்பு தங்களது டிக்கெட்டினை முன்பதிவு செய்யவேண்டும் என Jet Airways தெரிவித்துள்ளது.