ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் சுமார் 166 பயனிகளுடம் ஜெய்பூர் புறப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் உயரே செல்லச் செல்ல பயணிகள் 166 பேரும் அசவுகரியத்தை உணர்ந்துள்ளனர். இதையடுத்து, ஒரு கட்டத்தில் 166 பயணிகளில் 30 பேருக்கு மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. ரத்தம் வந்ததால், இருக்கைகளுக்கு மேல் பொருத்தப்பட்ட ஆக்சிஜன் மாஸ்குகள் பயணிகளின் பயன்பாட்டுக்காக இறக்கிவிடப்பட்டன. 



பலர் கடுமையான தலைவலியையும் உணர்ந்தனர். இதையடுத்து விமானம் உடனடியாக மும்பைக்குத் திருப்பப்பட்டது. விமானப் பணிக்குழுவினர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதை தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ்-ல் காற்றழுத்தத்தை பராமரிக்கும் அமைப்பை இயக்க பணிக்குழு மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.