சூரத்: கொரோனா வைரஸ் (Coronavirus) வெடித்தபின் நாடு முழுவதும் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சூரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில்  1 லட்சத்தில் துவங்கி 4 லட்சம் வரை வைரங்கள் பதித்த முகமூடிகளை விற்பனை செய்யும் யோசனையுடன் வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாஸ்க் ஆண், பெண் என்று மேட்சிங் மாஸ்களாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. "அமெரிக்க வைரத்துடன் அந்த மாஸ்க்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை 1.5 லட்சம். வெள்ளை தங்கம் மற்றும் உண்மையான வைரத்துடன் தயாரிக்கப்படும் மற்றொரு முகமூடி 4 லட்சம் ரூபாயாகும், ”என்று நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறினார். 


 



 


 


READ | Mask Parottas: வைரலாகும் மாஸ்க் பரோட்டா விழிப்புணர்வு வீடியோ


இந்த மாஸ்க்களின் துணி பொருள் அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டது என்று கடை உரிமையாளர் கூறினார். இந்த மாஸ்க்களில் இருந்து வைரமும் தங்கமும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி வெளியே எடுத்து மற்ற நகை பொருட்களை தயாரிக்க பயன்படுத்தலாம் என்று கூறினார்.


முன்னதாக சங்கர் குரேட் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு ரூ 2.90 லட்சம் மதிப்பில் தங்கத்தால் ஆன மாஸ்க்கை அணிந்து நகர்வலம் வந்தார். அப்போதே அவரின் அந்த நடவடிக்கைக்கு இணையத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்தது.


இதற்கிடையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,51,561. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,49,735 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,98,230.


 


READ | லேசர் ஒளி சோதனை.....COVID-19 க்கு எதிராக எந்த முகமூடி உங்களைப் பாதுகாக்கும்?


இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,93,802 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,95,513 ஆகவும், பலி எண்ணிக்கை 21,604 ஆகவும் உயர்ந்துவிட்டது. இந்தியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,83,659.