தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சராக, ரகுபார் தாஸ் ஒரு சாபத்தை உடைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்கண்ட் மாநிலத்தில் முதன்முதலில் பதவியேற்ற முதல்வரில் இருந்து, கடந்த 19 ஆண்டுகளில் எந்த ஜார்கண்ட் முதல்வரும் இந்த சாபத்தை உடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரகுபார் தாஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் பட்சத்தில் இந்த சாபத்தை உடைப்பார் என கருதப்படுகிறது.


ஜார்கண்டின் மாநிலத்தில் வாக்காளர்கள் ஒரு முதல்வரை தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியில் அமர விட்டதில்லை. 


முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜார்கண்ட் தேர்தலில், ரகுபார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியை கிட்டத்தட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இந்நிலையில் தற்போது 5 கட்டங்க்காள நடந்து முடிந்து ஜார்கண்ட் தேர்தில் முதல்வர் ரகுபார் தாஸ் வென்று மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா என்பது அனைவரது கேள்வியுமாக இருக்கிறது.


---19 ஆண்டுகளில் 6 முதல்வர்கள்---


முன்னாதக நவம்பர் 15, 2000 அன்று பீகாரில் இருந்து ஜார்கண்ட் பிரிக்கப்பட்ட பின்னர், ​​மாநில சட்டசபை உருவாக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த காலகட்டத்தில், ஜார்க்கண்ட் மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும், அரசியல் ரீதியாக கொந்தளிப்பால் ஆறு முதல்வர்களையும் கண்டிருக்கிறது.


பாபூலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, ஷிபு சோரன், மது கோடா, ஹேமந்த் சோரன் மற்றும் ரகுபார் தாஸ் ஆகியோர் ஜார்கண்டின் முதல்வர்களாக கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவி யேற்றத்தில்லை.


இந்நிலையல் தற்போது ​​நான்காவது சட்டமன்றத் தேர்தல் 2019-ல் ஜார்க்கண்டில் நடைப்பெற்றுள்ளது. இந்த தேர்தலில்  ரகுபார் தாஸ் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பதவி ஏற்றால் இந்த சாபத்தை அவர் உடைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷிபு சோரன்: ஆறு ஜார்கண்ட் முதல்வர்களில் எவரும் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. முன்னதாக ஆகஸ்ட் 27, 2008 அன்று, ஜார்கண்ட் முதல்வர் மது கோடா தனது பதவியை ராஜினாமா செய்தபின்னர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பொறுப்பேற்றார். அரசியலமைப்பு விதிகளின்படி, சோரனுக்கு மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்க ஆறு மாதங்கள் இருந்தன. இதனையடுத்து அடுத்துவந்த இடைத்தேர்தல்களில் தாமர் தொகுதியில் இருந்து சோரன் போட்டியிட்டார். 


எனினும் அவரை ஜார்கண்ட் கட்சியின் ராஜா பீட்டர் 8,973 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ராஜா பீட்டருக்கு 34,127 வாக்குகள் கிடைத்த இடத்தில், சோரன் 25,154 வாக்குகளை மட்டுமே வெல்ல முடிந்தது, இதனையடுத்து முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.


--- 2014 தேர்தலில் 4 முதல்வர்கள் தோல்வியடைந்துள்ளனர்---


2014 ஆம் ஆண்டில், ஜார்கண்டின் முதல் முதல்வர் பாபுலால் மராண்டி தன்வார் மற்றும் கிரிடிஹ் ஆகிய இரு இடங்களிலிருந்து போட்டியிட்டார், ஆனால் இரண்டிலிருந்தும் தோற்றார். கிரிடிஹில், அவர் பாஜக வேட்பாளர் நிர்பாய் ஷாஹாபாதியிடம் கிட்டத்தட்ட 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், அதே நேரத்தில் தன்வாரில் CPI(ML)-இன் ராஜ்குமார் யாதவிடம் தோற்றார்.


மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வர், ஆனால் 2014-ல் அவர் கர்சவன் ஆசனத்தில் தோல்வியை எதிர்கொண்டார். அவர் கிட்டத்தட்ட 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் JMM-ன் தஷ்ரத் கக்ராயிடம் தோற்றார்.


முன்னாள் முதல்வர் மது கோடாவும் மஜ்கானில் இருந்து தோற்றார் - அங்கு அவர் JMM-ன் நிரல் பூர்டியால் தோற்கடிக்கப்பட்டார்.


ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முதல்வராகவும், JMM தலைவராகவும் இருந்தபோதிலும், 2014 மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்தார். 2014-ஆம் ஆண்டில், ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பர்ஹைட்டில் இருந்து போட்டியிட்டார். அவர் பர்ஹைட் தொகுதியில் இருந்து வென்றபோது, ​​ஆனால் அவர் டும்காவில் பாஜக-வின் லூயிஸ் மராண்டியால் தோற்கடிக்கப்பட்டார்.


ரகுபார் தாஸ் இந்த சாபத்தை உடைப்பாரா?


ஜார்க்கண்டில் தேர்தல் போக்குகள் காணப்பட்டால், தற்போதைய முதல்வர் ரகுபார் தாஸ் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவர் தனது சொந்த அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினர் - சாராயு ராய் உடன் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அவர் வெற்றி பெற்றாலும், அவரது கட்சி வெற்றி பெற்று ஆட்சி பிடிக்கும் பட்சத்திலேயே அவர் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து இந்த சாபத்தை உடைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.