காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று பந்திப்போரா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


அதைத்தொடர்ந்து இன்று காவல்துறை அதிகாரிகள் 3 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் 3 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 


முன்னதாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி தீவிரவாதிகளின் உறவினர்கள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களை விடுவிக்கும்படி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு  கோரிக்கை வைத்துள்ளது. காவல்துறை அதற்கு மறுக்கவே, 3 போலீசாரை கடத்தியதாக கூறப்படுகிறது.