JNU பல்கலை., மாணவர்கள் 4 பேருக்கு ரூ.20,000 அபராதம்!
கட்டாய வருகை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 4 மாணவர்களுக்கு JNU பல்கலை., அபராதம் விதித்துள்ளது!
கட்டாய வருகை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 4 மாணவர்களுக்கு JNU பல்கலை., அபராதம் விதித்துள்ளது!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், கட்டாய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை நிர்வாக கட்டிடத்தின் முன்னர் போராட்டம் நடத்திய மாணவர்கள் 4 பேருக்கு தல ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று முன்தினம் தலைமை நிர்வாகி கவுசல் குமார் மாணவர் ஒன்றியத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், "பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் நிர்வாக கட்டிடம் அருகே சாலை மறியலில் இம்மாணவர்கள் ஈடுபட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ரூ .20,000 அபராதம் விதிக்கபடுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்களும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற தேசிய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் முகேஷ் குமார் தெரிவிக்கையில் "நாங்கள் நான்கு பேரும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்கள். UGC-ன் நிதியுதவி பெறவேண்டுமெனில் கட்டாய வருகை தேவை என பல்கலை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்தே நாங்கள் போராட்டம் நடத்தினோம், ஆனால் பல்கலை நிர்வாகம் வேறு காரணம் காட்டி எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது" என தெரிவித்துள்ளனர்.