தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக L.முருகன் நியமனம் செய்யபட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக பாஜகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. மேலும், தலைவர் பதவிக்கு பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்டது. அந்த வரிசையில், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேடி ராகவன் ஆகியோரில் ஒருவர் பதவிக்கு வருவார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக தமிழக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான L.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.


L.முருகன், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் BL பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் ML படிப்பும் முடித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறுகையில்.... என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு நான் செயல்படுவேன். தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.