அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைத்ததுபோல் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல வருடங்களாக இழுத்து கொண்டியிருந்த பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அதில், அயோத்தியில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம் என்றும் முஸ்லிம்கள் மசூதி கட்டி கொள்ள 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோயில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறக்கட்டளையை மத்திய அரசு அண்மையில் அமைத்தது. 


இந்நிலையில், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்., அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைத்தது போல், அங்கு மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும். கோயிலுக்காக உங்களால் அறக்கட்டளை அமைக்க முடிகிறது என்றால் அப்புறம் ஏன் மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கவில்லை எதின்று தெரிவித்தார்.