கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் நேற்று முனதினம் நடைப்பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் பேட்பாளர் சௌமியா ரெட்டி 5500 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன. தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. 


ஆனால், அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இதையடுத்து, கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. இந்நிலையில், இடைத் தேர்தலில் வாக்குகள் காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் காங்கிரஸ் பேட்பாளர் சௌமியா ரெட்டி 5500 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். முன்னதாக, காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே நேரடி மோதல் நிலவிய தொகுதி ஜெயநகர் என்பது குறிபிடத்தக்கது.