மறைந்த தலைவர் மு கருணாநிதி அவர்களின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது கலைஞரின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து சோனிய காந்தி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...



"நாட்டிற்காவும், தமிழ்நாட்டிற்காவும் அரசியலை கையில் எடுத்து ஐயராது போராடியர் கலைஞர். சமூக நீதிக்காவும், சமத்துவுத்திற்காவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியர். உலகளவில் தமிழையும், தமிழர்களையும் முதன்மைபடுத்த கடுமையாக உழைத்தவர். கருணாநிதி அவர்களின் இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெரும் இழப்பு. கலைஞரின் இழப்பு இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை உறுவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.


கலைஞர் அவர்களின் இழப்பு என்னை பொருத்தமட்டில் நொறுங்கிய நண்பரின் இழப்பு போன்றது. அவர் எப்போது என்மீது அன்பும் அரவனைப்பும் காட்டியவர். அவர் என் தந்தையை போல் நான் பார்க்கின்றேன்.


உடல்நல குறைவால் தற்போது மண்ணுலகை விட்டுச் செல்லும் தலைவர் எப்போது நம் மனதில் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பார். கலைஞர் அவர்களின் பிரிவால் வாடும் தமிழக மக்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்!