இரண்டு நாள் சலசலப்புகளுக்கு பின்னர் மத்திய பிரதேசத்தின் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போபாலில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் MLA-க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலினை AK ஆண்டனி நேற்றைய செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெளியிட்டார்.


நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து 3 மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது. மூன்று மாநில முதல்வர்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுப்பார் என கட்சி தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு நாட்களாகியும், யார் முதல்வர் பதவியை ஏற்பார் என்ற கேள்வி நிலவி வந்தது.



இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்திற்கான விடை கிடைத்துள்ளது. 


மத்திய பிரதேசத்தில்., மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் முதல்வர் பெயரில் அடிபட்டது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.


இதற்கிடையில் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் MLA-க்கள் கூட்டத்தில்  மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.