சபரிமலை கோவிலுக்குள் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய முடியாது என்ற நிலைமை மாற்றி, கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனக துர்கா(39), பிந்து அமினி (40) ஆகிய இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம்  செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சபரிமலைக்கு சென்ற கனகா துர்கா, பிந்து அமினி ஆகிய இருவரும் சம்பவநாள் அடுத்து தலைமறைவாகினர். கடந்த இரண்டு வாரங்களலாக இவர்கள் இருவரும், கொச்சி புறநகர் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.


இந்நிலையில் தற்போது வீடு திரும்பிய கனக துர்கா, தனது வீட்டு உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளார். எதிர்ப்புகளை மீறி கோவிலுக்குள் நுழைந்ததன் காரணமாக அவரது மாமியார் கனக துர்கா கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.


இதன் காரணமாக பலத்த காயமடைந்த கனக துர்கா, மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கனக துர்கா அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.