சீருடை அணியாததால் காலை இழந்த மாணவன்!
ஜீன்ஸ் பேண்டினை வெட்ட முயற்சிக்கையில், தவறுதலாக அவரது காலையும் சேர்த்து வெட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்: பள்ளி சீருடையினை அணியாமல் வந்ததால், பள்ளி நிர்வாகம் மாணவரின் காலை பதம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உபி மாநிலம் கான்பூரில், பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் சீருடை அணியாமல் ஜீன்ஸ் பேண்டில் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அம்மாணவனை தண்டிக்க அவரது ஜீன்ஸ் பேண்டினை வெட்ட முயற்சிக்கையில், தவறுதலாக அவரது காலையும் சேர்த்து வெட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.