புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கான்பூரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து 150 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கு நாசவேலையே காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன் பீகார், ஆந்திராவில் நடந்த ரயில் விபத்துகளிலும் நடந்து இருப்பதும் ஒரே கும்பல் இதில் ஈடுபட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது.


இந்த 3 ரயில் விபத்து சம்பவங்களிலும் பாகிஸ்தானின் உளவு அமைப்பு கைவரிசை காட்டியிருப்பதும் உள்ளூர் தீவிரவாதிகள் உதவியுடன் நாசவேலையை நடத்தி இருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது.


இதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் ஏஜெண்டு ‌ஷம்சுல் ஹோடா என தெரிய வந்தது. அவன் துபாயில் தலைமறைவாக இருந்தான். 


கடந்த சனிக்கிழமை ‌ஷம்சுல் ஹோடா துபாயில் இருந்து தப்பி நேபால் வந்தான். அவன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது நேபாள போலீசாரிடம் சிக்கினான். 


இதையடுத்து நேபால் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.