புதுடெல்லி: கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது,  வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களில் தியாகத்திற்குமரியாதை செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (President Ram Nath Kovind) திங்கள்கிழமை (ஜூலை 26) கார்கில் வெற்றி தினத்தின் 22 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிராஸில் நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்களில் முப்படைகளின்  தலைவர் ஜெனரல் பிபின் ராவத்தும் பங்கேற்பார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய நான்கு நாள் இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள குடியாசுத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை கார்கில் சென்றார். செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19 வது வருடாந்திர மாநாட்டில்  உரையாற்றுவார் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திங்களன்று கார்கில் வெற்றி தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, நேற்றைய 'மான் கி பாத்'  நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய  பிரதமர் மோடி (PM Modi) , கார்கில் வெற்றி தினத்தில்,  யுத்தத்தில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துமாறு  நாட்டு மக்களை வலியுறுத்தினார்.


ALSO READ | Varanasi: காசி விஸ்வநாதர்  கோயில் - ஞானவபி மசூதிக்கு இடையில் நில பரிமாற்றம்


"நாளை, அதாவது ஜூலை 26 கார்கில் வெற்றி தினம். கார்கில் போர் என்பது நமது ஆயுதப்படைகளின் வீர தீரத்தை பறைச்சாற்றும் போர் ஆகும். கார்கில் போரில் நமது வீரர்களின் தீர செயல்களை எடுத்துக் கூறும் தகவல்களை அனைவரும் படித்து கார்கில் போரின் வீர மணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்" என்று பிரதமர் மோடி தனது மாதாந்திர மன் கீ பாத் என்னும் வானொலி நிகழ்ச்சியின் போது கூறினார்.


1999  ஜூலை 26, அன்று இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானை முற்றிலுமாக விரட்டியடித்தன. அன்றிலிருந்து, ஆபரேஷன் விஜய் என்னும் மிஷனில்  பங்கேற்ற வீரர்களின் பெருமையையும் வீரத்தையும் நினைவு கூறும் நாளாக `கார்கில் விஜய் திவாஸ் 'என கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.


கார்கில் போரில்,  ஜூலை 26, 1999 அன்று பாகிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மலை உயரங்களை மீண்டும் கைப்பற்றி இந்திய வீரர்கள் பெற்ற வெற்றியை இந்த நாள் குறிக்கிறது.


ALSO READ | தில்லியின் முகாமிட்டுள்ள EPS-OPS; அரசியல் பரபரப்பின் காரணம் என்ன..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR